வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:47 IST)

பழையபடி அடாவடியை ஆரம்பித்த தாடிபாலாஜி? ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி நித்யா!!!

கணவர் தாடி பாலாஜி மீண்டும் தன்னை கொடுமைபடுத்துவதாக அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர்.
 
இந்நிலையில் நித்யா தனது கணவர் தாடி பாலாஜிக்கு எதிராக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாடி பாலாஜி மீண்டும் தம்மை கொடுமைபடுத்துவதாகவும், அடியாட்களை ஏவி, தமது வீட்டை சேதப்படுத்துவதாகவும் தமது பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.