1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (14:23 IST)

இயக்குனர் மகளை கரம் பிடித்தார் காமெடி நடிகர் சதீஷ் - திருமண தேதி இதோ!

தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.
இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ் மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்தி வருகிறார் சதீஷ். விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.  
 
இதற்கிடையில் அடிக்கடி திருமண சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.  பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சதீஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடைபெற்று இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வேறுகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி சதீஷுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. மணப்பெண் இயக்குனர் மோகன் ராஜாவின் உதவி இயக்குனரான நாகசுதர்சன் மகள் என கூறப்படுகிறது. மேலும் நேற்று நடிகர் சதீஷ் தனது திருமண அழைப்பிதழ் கொடுத்து தமிழக முதல் எடப்பாடியை சந்தித்து அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.