1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (13:11 IST)

"இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சாதான் நீ அடங்குவ" மிரட்டிய நபரை பிகில் நடிகை என்ன செய்தார் பாருங்க!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்திருந்த இப்படத்தில்  இந்துஜா,  ரெபா மோனிகா,  வர்ஷா,  பொல்லம்மா,  போன்ற ரசிகர்களுக்கு பல பரிட்சயமான நடிகைகள் நடித்துள்ளனர்.
இவர்களில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் தான் நடிகை ரேபா மோனிகா. இப்படத்தில் ஒரு காட்சியில் இவர் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஒருவர் முகத்தில் ஆசிட் அடித்து விடுவார். இதனால் அவர் கால்பந்து விளையாடுவதை இருந்து விலகிவிடுவார். பின்னர் விஜய் தான் அவருக்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்து மீண்டும் கால்பந்து விளையாட ஊக்குவிப்பார். இவரின் ரீ- என்ரியின் போது தான் ‘சிங்கப்பெண்னே’ பாடலே வரும். எனவே பிகில் படத்தில் நடித்திருந்த மற்ற பெண்களை விட  ரேபா மோனிகா ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ரெபோ மோனிகா பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ் செய்திருந்த நபர் ஒருவர்  ‘இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சா தான் சரிப்பட்டு வருவ’ என்று மோசமாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு "நோ கமெண்ட்ஸ்" என சிம்பிளாக கூறி ரிப்ளை செய்திருந்தார் ரெபோ. பின்னர், அந்த நபரை நெட்டிசன் பலரும்  திட்டி தீர்த்து வருவதை நீங்களே பாருங்கள்.