புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 21 நவம்பர் 2019 (12:31 IST)

பார்ட்டி ஹாலில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி - வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் பலரும் அறிந்த குழந்தை நட்சத்திரம் பேபி ஷாலினி. பின்னர் அடுத்தடுத்து அஜித் , விஜய் , மாதவன் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவு நாயகியாக பார்க்கப்பட்டார். இதையடுத்து அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபோது இருவரும் காதல் ஏற்பட்டு இருவீட்டாரின் முழு சம்மதத்துடன் 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். 
பின்னர் இவர்களுக்கு அனுஷ்கா குமார் என்ற மகளும் ஆத்விக் குமார் என்ற மகனும் இருக்கின்றனர். ஷாலினி திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என திருமண வாழ்வில் செட்டில் ஆகிவிட்டதால் படங்களில் நடிப்படத்தில் இருந்து நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார். ஆனாலும், தற்போது வரை ரசிகர்ளின் பேவரைட் நடிகையாகவே பார்க்கப்பட்டு வருகிறார். அஜித் தொடர்ந்து அடுத்தது பல படங்களில் நடித்து டாப் நடிகராக விளங்கி வருகிறார். 
 
இந்நிலையில் நடிகை ஷாலினி நேற்று தனது 40வது  பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாடட்டம் சிறப்பாக இருக்க அவரது குடும்பத்தினர் பார்ட்டி ஹாலில் பிறந்தநாள் கொண்டாடினர். அத்துடன் பல்வேறு சர்ப்ரைஸ் கொடுத்தனர். தற்போது அது சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.