ஒரு 10 நிமிஷம் வந்திட்டு போங்க யோகி பாபு... மவுசு கூடிக்கிட்டே போகுது....

VM| Last Modified வியாழன், 21 மார்ச் 2019 (13:03 IST)
நடிகர் யோகி பாபுவுக்கு மவுசு கூடிக்கிட்டே போகுது. எல்லாரும் என்கூடத்தான் நடிக்கணும், என்கூடத்தான் நடிக்கணும் கூப்பிட்டு கூப்பிட்டு நடிக்க வைத்து வருகிறார்கள்.
நடிகர் யோகி பாபு கோலமாவு கோகிலா படத்துக்கு டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். தற்போது அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என பலரது படங்களில் நடித்துவிட்டார் யோகி பாபு. இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில யோகி பாபு 10 நிமிடங்களாது தங்கள் படத்தில் வரவேண்டும் என பல இயக்குனர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் பட்டி  புலம் படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். இது பற்றி இயக்குனர் சுரேஷ் கூறுகையில். ஒரு படத்துக்கு நகைச்சுவை காட்சிகள் எந்த அளவுக்கு இருந்தால் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பது எனக்கு தெரியும். என் படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வந்து அமர்களப்படுத்துவார்.

பைக் ரேசினால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்பதே படத்தின் கதை. இந்த படத்தில் யோகி பாபு பேய் வேடத்தில்  நடித்துள்ளார். நாளை முதல் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்றார். இப்போது யோகி பாபு விஜய்யின் 63-வது படத்திலும்,  முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் படத்திலும் நடித்து வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :