பேத்தி கூட ஜோடி போடும் ரஜினி... அடுத்த சர்ச்சையை கிளப்பிய கோமாளி!

Last Updated: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (12:59 IST)
ரஜினி வயதான பிறகும் இளம் நடிகைகளுடன் ஜோடி போடுவதை கேலி செய்யும் விதமாக கோமாளி படத்தின் பாடல் வரி ஒன்று உள்ளது. 

 
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த வீடியோவின் இறுதி காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை படக்குழுவினர் கலாய்த்துள்ளனர். 
 
இதனால் கோபமான ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறி வந்தனர். மேலும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் எனவும் செய்திகள் வெளியானது.
இதனால் அந்த காட்சியைப் படத்தில் இருந்து நீக்க படக்குழுவினர் முடிவெடுத்தனர். இந்நிலையில், கோமாளி படத்தில் இடம் பெற்றுள்ள ஒளியும் இலியும் பாடலில் "சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆகிடுச்சே, இப்போ பேத்தியெல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்தாச்சு" என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது. 
 
இது ரஜினியை மீண்டும் வம்பிற்கு இழுப்பது போல உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. டிடெய்லர் சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்த நிலையில் அடுத்து புது சர்ச்சை கோமாளி படத்திற்கு உருவாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :