புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (19:27 IST)

கைலாசவுக்கு ஹனிமூன் செல்லும் யோகி பாபு... காக்டெய்ல் படத்தின் கலகலப்பான டீசர்!

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததால் அவரை வைத்து ஹீரோவாக படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர்
 
அந்த வகையில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கும் காக்டெயில் திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் முருகன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாய் பாஸ்கர் இசையமைக்கிறார். நவீன் ஒளிப்பதிவில் பாசில் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்டர் ஒன்றில் முருகன் கெட்டப்பில் பூ நூல் இல்லாமல் இருந்த யோகி பாபு பெரும் சர்ச்சைக்குள்ளானார். 
 
இதனால் இப்படத்தின் மீதான மக்களின் கவனம் எளிதாக திரும்பியதை அடுத்து சற்றுமுன் காக்டெயில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். கலகலப்பான காமெடியில் கவுண்டர் கொடுக்கும் யோகி பாபுவுக்கு நிச்சயம் இப்படம் பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.