ஏன் இந்த ரகசிய திருமணம்...? மன்னிப்பு கேட்டு காரணத்தை கூறிய யோகி பாபு..?
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.
பிப்ரவரி 5ஆம் தேதி இவரது திருத்தணி கோவிலில் தடபுடலாக நடக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் திருமண இடத்தை மாற்றிய யோகி பாபு செய்யாறில் உள்ள தனது குலதெய்வ கோவிலில் அவசர திருமணம் செய்துகொண்டுள்ளார். வெறும் 10 பேர் மட்டுமே பங்கேற்ற இத்திருமணத்தில் மணப்பெண்ணின் பெற்றோர் கூட பங்கேற்காதது தான் அனைவருக்கும் குழப்பாக இருந்தது.
இந்நிலையில் இது குறித்து முதன் முறையாக கூறியுள்ள யோகி பாபு, முதலில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார்... பின்னர், "நான் எல்லோரையும் அழைத்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று தான் நினைத்தேன், ஆனால், என் குடும்பத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்படி அவசர திருமணம் நடைபெற்றது. நிச்சயம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைப்பேன் என கூறினார் .