செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 30 ஜனவரி 2020 (18:43 IST)

கல்யாண தேதியை அறிவித்துவிட்டார் யோகி பாபு - பெண் இவர் தான்!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார்... நடிகர் விஜய்யுடன் பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து லீடிங் காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.  கூடுவே அவரது சம்பளம் ....திருமணம் குறித்த வதந்திகளும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும். அந்தவகையில் இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்துள்ளது.  ஆனால்... யோகி பாபுவோ, நானே சொல்லுறேன் அவசரப்படாதீங்க என கூறி தன் குடும்பத்திற்கு ஏற்ற பெண் தேடி வந்தார். 
 
அந்தவகையில் தற்போது அவர் எதிர்பார்த்தபடியே தனக்கான துணையை தேடிவிட்டார். ஆம், பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.. என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதேபோல் எனக்கான பெண் கிடைத்துவிட்டார்" என பார்கவி பற்றி யோகி பாபு தெரிவித்தார்.  இவர்களது திருமணம் பிப்ரவரி 5ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் நடைபெறவிருக்கிறது.