யோகி பாபுவுக்கு அஜித் கொடுத்த திருமணப் பரிசு!

அஜித்துடன் யோகிபாபு
Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:41 IST)
அஜித்துடன் யோகிபாபு

வலிமை படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபுவை நடிகர் அஜித் பரிந்துரை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு திருமணப் பரிசாக இப்போது அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமைப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் ரகசியமாக இருக்கும் வேளையில் இப்போது யோகி பாபு இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த வாய்ப்பை அஜித்தே தனிப்பட்ட முறையில் இயக்குனரிடம் சொல்லி பரிந்துரைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. யோகி பாபு ஏற்கனவே அஜித்துடன் வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.இதில் மேலும் படிக்கவும் :