1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (11:23 IST)

தமிழில் வெளியாகும் 'அர்ஜுன் ரெட்டி'

தெலுங்கில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது.



அந்த வகையில் விஜய் தேவரகொண்டா, பூஜா ஜாவேரி, பிரகாஷ் ராஜ், பிரபாகர், முரளி, சர்மா, சுரேகா ஆகியோரது நடிப்பில் வெளியான 'துவாரகா' படம் தமிழில் வெளியாக உள்ளது. ஆந்திராவில் துவாரகா படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. இந்த படத் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து இருந்தது. தமிழில் துவாரகா  படம் வெளியாக உள்ளது. இதற்கு   விஜய் தேவரகொண்டா நடித்து ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை படமான 'அர்ஜுன் ரெட்டி' என்று பெயர் வைத்துள்ளார்.
 
'துவாரகா' படத்தை ஸ்ரீநிவாச ரவீந்திரா இயக்கி இருந்தார். சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். நெல்லை பாரதி தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தை ஏ.என்.பாலாஜி. தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
 
 திருடனாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, காதலின்ல் எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை. இதில் குடும்ப சென்டிமெண்ட், நகைச்சுவை, காதல் ஆகியவை உள்ளது.