1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (18:52 IST)

விஜய்யின் அடுத்த படத்தில் குத்தாட்டம் ஆடும் சாயிஷா-யோகிபாபு

இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது ஒரே நேரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தையும், ஜிவி பிரகாஷ் நடித்து வரும் 'வாட்ச்மேன்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் 'வாட்ச்மேன்' படத்திற்காக சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ராப் பாடல் ஒன்றை கம்போஸ் செய்துள்ளார். குத்து பாட்டு டைப்பில் இருக்கும் இந்த பாடலில் ஒருசில முன்னணி நடிகர், நடிகைகளும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடனம் ஆடவுள்ளனர்.

அந்த வகையில் இந்த பாடலில் யோகிபாபுவும், சாயிஷாவும் நடனம் ஆடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாயிஷா, காமெடி நடிகருடன் குத்தாட்டம் ஆட ஒப்புக்கொண்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, ராஜ் அர்ஜூன், உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்