1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (16:53 IST)

நீ போராடியிருக்க வேண்டும் சித்ரா!!! பிரபல நடிகர் உருக்கம் !!

இந்த வருடம் எல்லோருக்கும் மறக்க முடியாத வருடமாக அமைந்துவிட்டது. ஹாலிவுட், பாலிவுட்,சாண்டல் வுட், கோலிவுட்டின் முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள், பாடர்கள் என பலரும் இந்த வருடம் உயிரிழந்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று அதிகாலையில் முல்லை சீரியல் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச்  செய்தி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக பதிவு திருமணம் செய்து கொண்டு, சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா, கன்னத்தில் காயங்களுடன் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை  கொலை செய்யப்பட்டாரா என கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  சித்ராவுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவந்த நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமாக ஒரு பதிவிட்டுள்ளார்.

சித்ராவுக்கு பல முகங்கள் இருந்தாலும் அவரை  மக்களின் கொண்டு சேர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் தான்.

இந்நிலையில் சித்ராவுடன் நடித்த குமரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உனது தைரியத்தினால் நீ அனைவருக்கும் அறியப்பட்டார்ய்…பல பெண்களுக்கும் நீ முன்னுதாரணமாக இருந்தாய்..நீ எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சிவாங்கி கூறியுள்ளதாவது : அக்கா நாம் நேற்றுதான் ஆடிப் பாடி மகிழ்ச்சியாய் இருந்தோம்…இன்னும் 24 மணி நேரம் கூட இப்போது நீங்கள் உயிருடம் இல்லையே என வேதனை தெரிவித்துள்ளார்.