திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (19:43 IST)

சூப்பர் ஸ்டாரின் ''#Mega154 ''பட முக்கிய அறிவிப்பு...இணையதளத்தில் டிரெண்டிங்...

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் சூப்பபர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் சமீபத்தில், தன் மகனுடன் இணைந்து  நடித்த  ஆச்சார்யா என்ற படம் கலவையான விமர்சங்கள் பெற்றது.

இது அவருக்குப் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தாலும், அடுத்து, லூசியர் படத்தின் ரீமேக்கான காட்பாதர் படம் அவரது நடிப்பில் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், அவரது ரசிகர்களுக்கு  இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவரது 154 வது படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 .07 க்கு வெளியாகும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே தற்போது, இந்த அறிவிப்பு இணையதளத்தில் பரவலாகி வருகிறது.
 
 Edited by Sinoj