செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (17:00 IST)

''150 கோடி கிளப்பில்'' இணைந்த சூப்பர் ஸ்டாரின் படம்

godfather
தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் சிஞ்சீவி நடிப்பில் வெளியான காட்ஃபாதர் படம் வசூல் சாதனை படைத்துள்ளது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

வெளியான 3 நாட்களில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் மோகன் ராஜாவை அழைத்துப் பாராட்டியிருந்தார்.

இந்த நிலையில்,  காட்பாதர் படம் கலைவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், இப்படம் உலகம் முழுவதும் வெளியான 10 நாட்களில் ரூ.150 கோடி வசூலீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஆச்சார்யா படத்தின் தோல்வியை அடுத்து, சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் சூப்பர் ஹிட் படமாக காட்பாதர் அமைந்து, வசூலில் சாதனை படைத்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் சிரஞ்சீவி தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj