’’இவர்கள் ‘’இன்றி இந்திய சரித்திரம் கிடையாது – கமல்ஹாசன் டுவீட்
நடிகரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.
இந்நிலையில் அவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் அதில், . 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி என்று பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம். 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.
தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.