சேரன் தொட்டத்துக்கு அந்த கத்து கத்தின - இதெல்லாம் என்ன? மீராவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

Last Updated: வெள்ளி, 26 ஜூலை 2019 (16:04 IST)
பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் நேற்று சேரன் மீது பழி சுமத்தி அவரை மிகவும் கீழ்த்தரமாக நடத்தினார். இதனால் சேரன் மிகுந்த மனவருத்தப்பட்டு கண்லங்கி அழுதார். 


 
நேற்றைய டாஸ்க்கில் சேரன் மீராவை தகாத இடத்தில் தொட்டுவிட்டதாக கூறி  அபாண்டமாக பழி சுமத்தி பெரிய ரகளை செய்தார் மீரா. மேலும் மீரா சேரனை பார்த்து தன்னை எந்த ஆணும் தொட்டதில்லை, இதுபோன்ற அனுபவம் தனக்கு இல்லை என்று கூறி பாலியல் குற்றச்சாட்டாக முன்வைத்தார்.


 
இதனை கண்ட ரசிகர்கள் நீ மாடல் தொழிலை செய்துவரும்போது ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்ற என மீராவை திட்டி தீர்த்தனர். பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் சேரனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 


 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் மீராவின் போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளனர்  நெட்டிசன்ஸ் . அதாவது ஆண் ஒருவருடன் மீரா நெருங்கி கட்டித்தழுவி நடனமாடும் வீடியோ ஒன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை கண்ட நெட்டிசன்ஸ் என்னம்மா மீரா இதுவரைக்கும் யாரும் தொட்டதில்லன்னு சொன்னியேம்மா இதெல்லாம் என்ன என்று கேட்டு அந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

இதில் மேலும் படிக்கவும் :