சண்டைக்கு போன மீரா - கண்கலங்கி மன்னிப்பு கேட்ட சேரன்!

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (12:54 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் மீரா மிதுன் சேரனுடன் சண்டையிட்டு கத்துகிறார். 


 
மீரா மிதுன் வயது வித்தியாசமின்றி எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவது சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் வெறுப்படைய வைத்துள்ளது. தற்போது இந்த ப்ரோமோவில் நாட்டாமை சேரனை பார்த்து மீரா மிதுன், நீங்க நியாமா பேசுறமாதிரியே தெரியல எந்த விதத்திலும் என்று கத்துகிறார். 
 
இதனால் வீட்டில் இருக்கும் மதுமிதா, ரேஷ்மா , லொஸ்லியா உள்ளிட்டோர்,  "அவர் வேண்டுமென்றே செய்யவில்லைன்னு சொல்லிட்டாரு அத்தோட அதை விட்டுடுங்க" என்று மீரா மிதுனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். 
 
பின்னர் சேரன் "தயவு செய்து எல்லாரும் மன்னிச்சுடுங்க" என கையெடுத்து கும்பிட்டு எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறார். மேலும் இனிமேல் நான் யாரிடமும் பேசவில்லை, யாரிடமும் பழகவில்லை  என கண்கலங்கி அங்கிருந்து சென்று விடுகிறார். 
 


இதில் மேலும் படிக்கவும் :