திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 மே 2018 (13:01 IST)

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அவசர அவசரமாக காஞ்சிபுரம் சென்ற நடிகர் நாசர்

முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி ஆகியோர் மீது நடிகர் சங்க நிர்வாகிகள் நில மோசடி தொடர்பான புகார் ஒன்றை ஏற்கனவே அளித்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
இன்றைய விசாரணைக்கு பின்னர் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் இன்று அவசர அவசரமாக காஞ்சிபுரம் சென்றார். காஞ்சி எஸ்பி அலுவலக சென்ற நடிகர் நாசர் காஞ்சி எஸ்பியிடம் ஆவணங்களை தருகிறார். அவர் அளிக்கும் ஆவணங்களின் அடிப்படையில் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.