1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:54 IST)

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’யில் டான்ஸ் ஆடிய வரலட்சுமி சரத்குமார்

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
 
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்குப் பெண் தேடும் இந்த நிகழ்ச்சியை, நடிகை சங்கீதா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பரத், ஷ்யாம், கலையரசன், வரலட்சுமி சரத்குமார், சாந்தனு பாக்யராஜ், கிகி விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இரண்டாவது முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். சிறப்பு விருந்தினராக அல்ல, டான்ஸராக! சில பாடல்களுக்கு அவர் நடனம் ஆடியிருக்கிறார்.