புதன், 10 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By VM
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:10 IST)

எப்பவும் விஜய் எனக்கு அண்ணன் தான்: சிம்பு

எப்பவும் விஜய் எனக்கு அண்ணன் தான்: சிம்பு
விஜய் - அஜித் இருவரில் யாரை பிடிக்கும்? விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என சிம்புவிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. 


அதற்கு சிம்பு கூறியதாவது: 'எனக்கு விஜய் அண்ணாவை பர்சனலாத் தெரியும், பிடிக்கும். சினிமாவில் எனக்கு அஜித் சாரைப் பிடிக்கும். நான் எப்பவும் வெளிப்படையா இருந்திருக்கேன்.
 
அந்த வி‌ஷயத்தை விஜய் அண்ணா தப்பா எடுத்துக்கிட்டதில்லை. அவருக்கு நான் உண்மையா தான் இருக்கேன். அது அவருக்குப் பிடிக்கும். அவர் நல்லா  நடிச்சிட்டு இருக்கார். சமுதாயத்து மேல அக்கறை இருக்கு. பின்னாடி அவர் அரசியலுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு.
 
நான் எப்பவும் அவர்கிட்ட தம்பியா பழகியிருக்கேன். அவர் அப்போ யார்கிட்டேயும் அவ்வளவா பேசமாட்டார். நிகழ்ச்சிகள்ல பார்த்தா நான் மட்டும் அவர்கிட்ட போய் பேசுவேன். அப்புறம் ரெண்டு பேரும் அவ்வளவா நெருக்கமாகலை. ஆனா, எப்பவும் அவர் எனக்கு அண்ணன் மாதிரிதான்.’ இவ்வாறு கூறினார்.