செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (19:36 IST)

செக்கச் சிவந்த நியூ வேல்டு

நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள செக்கச் சிவந்த வானம் நியூ வேல்டு எனும் கொரிய படத்தின் காப்பி என ரசிகரகள் காட்டம் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவை ஆட்டிப்படைக்கும் கேங்ஸ்டர் கோல்டுமூன். ஒரு கார் விபத்தில் கொல்லப்படுகிறார். அவருக்கு அடுத்த படியாக அவரின் சாம்ராஜ்யத்தில் பலம் கொண்டவர்கள் ஜுங் ச்சூங், லீ ஜூங் கு, ஜாங்க் சு கி. மூன்று பேரும் கோல்டுமூனின் முன்று வெவ்வேறு பகுதிகளில் வியாபாரத்தை கவனித்து வருகின்றனர். ஜுங்கின் ஒற்றனாக வேலைப் பார்த்து ரகசிய போலிஸாக வேலைப் பார்த்து வரும் லீ ஜா சுங் (3 பேருக்கும் உளவு சொல்லும் போலிஸ்)..கோல்டுமூனின் இறப்புக்குப் பின் அதிகாரத்தில் அமர்வதற்கு மூன்று பேருக்குள்ளும் நடக்கும் போரே நியூ வேல்டு.

இந்த அதிகாரப் போட்டியில் யார் வென்றார்கள் இதில் அந்த போலீஸ் யாருக்கு வேலை செய்கிறார். இறுதியில் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை ரத்தம் தெரிக்க தெரிக்க காட்டியது நியூவேல்டு. பார்க் ஹூன் ஜுங் இயக்கிய இந்தப் படம் கொரியாவில் அதிரி புதிரி ஹிட்.

’என்ன யோசிக்கிறீர்கள்? நீங்கள் நேற்று செக்கச் சிவந்த வானம் பார்த்திருப்பின் இந்நேரம் உண்மையைக் கண்டுபிடித்து இருப்பீர்கள். ஆம் 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஆங்காங்கே பட்டி டிங்க்கரிக் பார்த்துதான் செக்கச் சிவந்த வானமாக்கி இருக்கிறார்கள்.’
இது தெரியாமல் நேற்று முழுவதும் இப்படத்தைக் கொண்டாடிய ரசிகர்கள் இன்று சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.