1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:09 IST)

விஜய்-க்கு ஒரு நாள் உண்மை புரியும்: சந்திரசேகர் ஆதங்கம்!

நான் கட்சி தொடங்குவதே விஜய்க்காகத்தான் என்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி. 

 
தனது சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, நான் கட்சி தொடங்குவதே விஜய்க்காகத்தான் என்றும் அது ஒருநாள் அவருக்கு புரியும்  என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் விஜய்க்கு ஒரு அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுப்பேன். இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. நான் விஜய்யின் எதிர்காலத்துக்காக யோசிப்பது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.