திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (17:17 IST)

மாஸ்டர் பற்றிய இந்த கேள்வியே அவசியமில்லாதது: விஜய்சேதுபதி பேட்டி

மாஸ்டர் படம் குறித்த கேள்வி ஒன்றை கேட்ட நிருபரிடம் இந்த கேள்வி அவசியமில்லாதது என விஜய் சேதுபதி பதிலளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் அனைத்து சினிமா ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதியிடம் 'மாஸ்டர் படம் விஜய் படம் அல்ல, விஜய் சேதுபதி படம் என்று சிலர் கூறி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது 'இது தேவையில்லாத கேள்வி என்றும் மாஸ்டர் திரைப்படம் வெற்றிபெற விஜய் தான் முக்கிய காரணம் என்றும் அவருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார் 
 
விஜய் சேதுபதியின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது