விஷாலின் சக்ரா ஸ்னீக் பீக்… பாஜகவை சீண்டுகிறாரா?

Last Modified புதன், 17 பிப்ரவரி 2021 (08:31 IST)

விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீசாகும் என விஷால் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததுடன், இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தின் முக்கிய் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஷால் அறிவித்த நிலையில்
அதன்படி நடிகர் பிரசன்னா நடிகர் விஷாலின், சக்ரா படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய ஒரு மொழிகளுக்கான ஸ்னீப் பீக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது இணையதளத்தில்
ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த ஸ்னீக்பீக் காட்சிகள் பாஜக அரசையும், அதன் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை சீண்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் விஷால் பாஜகவில் சேர உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் பாஜகவுக்கு எதிராக இப்படியான காட்சிகளில் நடித்திருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :