திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (22:41 IST)

துணிவு படத்திற்கு சென்சர் சான்றிதழ்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Thunivu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் துணிவு பட சென்சார் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் துணிவு.

இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும்  ஒன்று.

இப்படத்தின் டிரைலர் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்படம் சென்சாருக்கு அனுப்பியிருந்த நிலையில், இப்படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

அதன்படி, துணிவு படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதை தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


மேலும், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பேசும் வார்த்தைகளுக்கு கட் செய்யப்பட்டுள்ளதாகவும், பேங்க் கொள்ளையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் 2.25 மணி நேரம் ரன்னிங் நேரம் என்ற தகவலும்  வெளியாகிறது.