1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (19:13 IST)

துணிவு -பட தெலுங்கு டிரைலர் ரிலீஸ்

tegimpu
துணிவு படத்தின் தெலுங்குப் பதிப்பான தேகிம்பு பட டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் துணிவு.

இந்த ஆண்டின் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் இதுவும்  ஒன்று.

இப்படத்தின் டிரைலர் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸாகி 3 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

வலிமை படம் போன்று இப்படமும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.

தெலுங்கில் இப்படம் தேகிம்பு என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த நிலையில், ‘’தேகிம்பு’’ டிரைலரை  படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.