ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு!

blue sattai
ப்ளூ சட்டை மாறன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர அதிகாரிகள் மறுப்பு!
siva| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (10:59 IST)
சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது
ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இயக்கிய திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற முடியாத வகையில் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :