ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 29 அக்டோபர் 2018 (15:11 IST)

சர்கார் படத்துக்கு ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் மனு

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்கக் கோரி, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலிடம் மனு அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில், விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து, நான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதையை திருடி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தை இயக்கினார். இது குறித்த வழக்கு தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருவதால், தமது ஒட்டுமொத்த வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
எனவே எனக்கு நியாயம் கிடைக்கும் வரை, ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது இயக்கியுள்ள சர்கார் படத்திற்கு ரெட் கார்டு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுளார்.