ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (17:23 IST)

சர்கார் திருட்டு கதையா? - உதவி இயக்குனர் புகார்

உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் தன்னுடைய செங்கோல் கதையைத்தான் திருடி, சர்கார் படத்தை எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 
பொக்கிஷம், சுக்ரன், பெண் சிங்கம்  ஆகிய படங்களில்  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் ராஜேந்திரன். இவர் 2007 ஆண்டில் தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செங்கோல் கதையை  பதிவு செய்துள்ளாராம்.  தொடர்ந்து தனது கதை திருடப்பட்டதை புகாராக எழுத்தாளர் சங்கத்தில் அளித்தார். 
 
இந்நிலையில் செங்கோல் மற்றும் சர்க்கார் கதை ஏறக்குறைய ஒரேமாதிரி இருப்பதாகவும் ‘செங்கோல் கதை தான் சர்கார் கதை’ என்பது எழுத்தாளர்கள் சங்க விசாரணையில் தெரிய வந்திருப்பதாக உதவி இயக்குனர்கள் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால் சங்க தலைவர் பாக்யராஜ் இதுவரை எந்த உரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதற்கிடையே உதவி இயக்குனர் ராஜேந்திரன் சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான பல படங்களின் கதைகள் அடுத்தவர் கதை என்ற சர்ச்சை எழுந்து வருகிறது.