1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஜூலை 2022 (15:55 IST)

அருண் விஜய்யின் ''யானை'' படத்திற்கு எதிராக வழக்கு!

yaanai
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில்  நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் யானை.

இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாகக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.  இப்படம் ஹிட் ஆன நிலையில், இப்பபடத்திற்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ் நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் கோமாஸ் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்,யானை படத்தில், ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம், பாம்பன் பகுதி மீனவர்கள்  சமூக விரோதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவு , குழந்தைகளளை தவறாகப் பயன்படுத்துபவர்களாகவும், சித்தரித்ததாகக் குற்றச்சாட்டி, மீனவர்களை அவமதிப்பது போன்ற காட்சிகளை நீக்கி இப்படத்திற்கு வழங்கிய சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.