வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (18:01 IST)

பைக்கில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள்...தூக்கி வீசப்பட்ட வீடியோ !

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கமுதி சாலையில், நேதாஜி நகர் பகுதியில்   நேற்று அதிவேகமாக இருசக்கரவாகனத்தில் சென்ற இளைஞர்கள் அங்குள்ள எச்சரிக்கை பலகை வைத்துள்ள இரும்பு கம்பத்தில்  மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாயல்குடி கமுதி சாலையில், இரு பைக்குகளில்   போட்டு போட்டுக்கொண்டு அதிவேகத்தில் வந்த 6 இளைஞர்கள்  கட்டுப்படுத்த முடியாமல் இரும்பு கம்பத்தில் மோதி, பறந்துசென்று சாலையின் ஓரம் விழுந்தனர்.கீழே விழுந்து பத்து அடி தூரம் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகிறது.