வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (07:55 IST)

பழம்பெரும் படத்தொகுப்பாளர் விட்டல் காலமானார்!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் படத்தொகுப்பாளரான விட்டல் 300 படங்களுக்கும் மேல் பணியாற்றியவர். சிவாஜி, எம் ஜி ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு அவர் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

அவர் படத்தொகுப்பு செய்த படங்களில் 'ஆடு புலி ஆட்டம்', 'ஜப்பானில் கல்யாணராமன்', 'படிக்காதவன்', 'முரட்டுக்காளை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'பாயும் புலி', 'விக்ரம்', 'ராஜா சின்ன ரோஜா' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த SP முத்துராமன் இயக்கிய பெரும்பாலான படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் விட்டல்தான்.

இந்நிலையில் நேற்று அவர் காலமானாகியுள்ளார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு சினிமா கலைஞர்களும் ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.