திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (12:13 IST)

இளம்பெண்ணுக்கு நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டல்.. சென்னை வாலிபர் தலைமறைவு..!

இளம் பெண்ணுக்கு நிர்வாண வீடியோ அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய சென்னையை சேர்ந்த 25 வயது வாலிபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
 சென்னை சேர்ந்த திலீப் குமார் என்ற 25 வயது நபர் இளம் பெண் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் இவரை விட்டு விலகவே ஒரே ஒருமுறை வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றினால் இனிமேல் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். 
 
இதனை அடுத்து அந்த பெண்ணும் அவ்வாறு தோன்ற அதை வீடியோவாக பதிவு செய்து திலீப் குமார் அந்த பெண்ணை தினமும் மிரட்டி உள்ளதாகவும் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியாகவும் தெரிகிறது. 
 
இதனை அடுத்து தன்னை மிரட்டிய வாலிபர் மீது அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் நிர்வாணம் வீடியோவை அனுப்பி மிரட்டிய வாலிபர் திலீப் குமார் தலைமறைவு ஆகி உள்ளார் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 
Edited by Siva