செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (10:22 IST)

வேலம்மாள் பாட்டி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா பேரிடர் கால நிவாரணமாக அரசு வழங்கிய நிவாரணத்தொகையை பெற்றபோது மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்து நிற்பார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  தமிழ்நாடு அரசு வழங்கிய கொரோனா நிவாரணத் தொகையை வாங்கியவுடன் வேலம்மாள் பாட்டியின் புன்சிரிப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran