வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (14:46 IST)

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !! ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல மலையாள பட நடிகை ஆஹான குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

கொரொனா தொற்று யாருக்கும் எப்போதும் வரும் என எதிர்ப்பார்க்கவே முடியாது. பல கோடீஸ்வரர்கள் முதற்கொண்டு,சராசரி மனிதர்கள் வரை பலருக்கும் கொரொனா தொற்று தாக்கியது.

இந்நிலையில், காவலன்,தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் நடித்த  பிரபல நடிகையும் மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் மகளுமான ஆஹான குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சில தினங்களுக்கு முன் நான் கொரொனா பரிசோதனை செய்தேன். அப்போது எனக்கு பாசிட்டிவ் என முடிவுகள் வெளியானது. அதனால் நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். இருப்பினும் உற்சாகத்துடன் உள்ளேன்.  இத்தொற்றிலிருந்து விரையில் குணமடைந்து நெகட்டிவ் பெறுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆஹானா கிருஷ்ணாவின் ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தாலும் அவர் குணமடையவேண்டி கடவுளிடம் பிரார்த்திப்பதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.