1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (16:52 IST)

ஆலியா பட்- ரன்பீர் கபூர் படத்தின் போஸ்டர் வைரல்

Brahmāstra
பாலிவுட் சினிமாவில்     முன்னணி  நடிகை ஆலியா பட்- ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்தா படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வைரலாகிவருகிறது.

பாலுவுட் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். இவரும் இவரது காதலர் ரன்பீர் கபீர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்த்ரா.  இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் அயர்ன் முகர்ஜி இயக்குயுள்ளார். இப்படத்தை தர்மா புரொடேக்சன் மற்றும் பாக்ஸ் ஸ்டார் இந்தியா தயாரிக்கிறது.

இப்படத்தில், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர்  ஆலியாபட், நாகர்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள்  நடித்துள்ளனர்.இப்படம் தமிழ் , தெலுங்கு,  இந்தி, கன்னட, மலையாள உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

இப்படம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் போஸ்டர்  இயக்கு நர் அயர்ன் முகர்ஜி வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.