வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (13:52 IST)

நான் அரசியல்வாதி இல்ல.. போர்வீரன்! முதல்வரோடு விஜய்! – போஸ்டர் வைரல்!

Beast
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி முதல்வருடன் விஜய் உள்ள போஸ்டரை ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.
Vijay

ஏப்ரல் 13 படம் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு, போஸ்டர், பேனர்கள் அமைத்தல் போன்றவற்றில் மிகவும் பிஸியாக உள்ளனர். புதுச்சேரியில் விஜய்யின் பீஸ்ட் படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து பேனர்கள் வைத்துள்ள விஜய் ரசிகர்கள், அதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, விஜய் சந்தித்த புகைப்படங்களை வைத்துள்ளனர். அதற்கு அருகே “நான் அரசியல்வாதி இல்லை.. நான் போர்வீரன்” என்ற பீஸ்ட் படத்தின் வசனத்தையும் இடம்பெற செய்துள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.