வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (23:45 IST)

மனசு ரொம்ப வலிக்குது.. ''அடங்காத அஜித் குரூப்ஸ்'' போஸ்டர் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில்  ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  வலிமை. இப்படத்தை போனிகபூர்  தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்த நிலையில், தற்போது கொரொனா இரண்டாம் அலை மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளதால் இப்படத்தின் ரிலீஸை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்கள் கோவையில் ஒரு  போஸ்டர் ஒட்டியுள்ளனர். இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஏமாற்றம், ஏமாறம் ஏமாற்றம் மனசு ரொம்ப வலி ( மை)க்குது எனத் தெரிவித்து, அப்போஸ்டரில் அடங்கா அஜித் குரூப்ஸ் கோவை என தெரிவித்துள்ளனர்.