திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (15:21 IST)

விஜய் பட பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்....பரவலாகும் வீடியோ

kalikash kher
கர்நாடக மா நிலத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில்  பாடிய பிரபல பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசித் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மா நிலம் மீரட்டைச் சேர்ந்தவர் பாடகர் கைலாஷ் கேர். இவர், இந்திசினிமாவில் முன்னணி பாடகராக வலம் வருகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான வைசா பி ஹோதா ஹை பரர்ட் 2 என்ற படத்தில் இடம்பெற அல்லாஜ் கே பந்த் என்ற பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.

அதன்பின்னர்,தமிழில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், வெயில் படத்தில் இடம்பெற்ற வெயிலோடி விளையாடி, மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் ஆகிய பாடல்கள் பாடியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிய பாடகர் கைலாஷ் கெர் மீது கன்னட பாடல்கள் பாடக்கோரி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸர் விசாரித்து வருகின்றனர்.