செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (16:16 IST)

இது எங்க வெற்றி இல்ல.. இந்திய சினிமாவின் வெற்றி! – ராஜமௌலி பெருமிதம்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் க்ளோப் கிடைத்தது குறித்து இயக்குனர் ராஜமௌலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆஸ்கர் விருந்து எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளுக்கான திரைப்படங்களில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பல்வேறு பிரிவுகளில் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி பிரபலமான கோல்டன் க்ளோப் விருதுகளுக்கான போட்டியிலும் ஆர்.ஆர்.ஆர் தீவிரமாக போட்டியிட்டு வந்தது. கோல்டன் க்ளோப் விருதுகளில் சிறந்த பாடல் மற்றும் சிறந்த இயக்குனருக்கான பரிந்துரையில் நுழைந்த ஆர்.ஆர்.ஆர் சிறந்த பாடலுக்காக ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருதை வென்றது. இந்த விருதை அந்த படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள இயக்குனர் ராஜமௌலி “இது ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கான வெற்றி மட்டுமல்ல. இது இந்திய சினிமாவுக்கு கிடைத்த வெற்றி. கோல்டன் க்ளோப் விருதில் கால்பதித்த எனது நண்பர் எம்.எம்.கீரவாணிக்கு வாழ்த்துகள். உலகமே தற்போது நாட்டு நாட்டு பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறது.

சந்திரபோஸின் நிகழ்வான பாடல் வரிகள், ப்ரேம் ரக்‌ஷித்தின் நடன அசைவுகள் மற்றும் கால பைரவா & ராகுலின் மந்திர குரல்கள் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. இதை பற்றி சொல்ல தேவையே இல்லை. இந்த பாடலை இவ்வளவு உயிர்ப்புடன் கொண்டு வர காரணம். நன்றிகள் எண்டிஆர் மற்றும் ராம்சரண்” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K