ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவில் லைட்மேன் தவறி விழுந்து பலி!
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், ஆஸ்கர் விருது பெற்றவருமான ஏ.ஆர்.ரஹ்மான், கும்மிடிப்பூண்டியில், ஏ.ஆர். ஃபிலிம் சிட்டி என்ற ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படங்கள் இங்கு ஷூட்டிங் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடிகர் சத்ய ராஜ் நடிக்கும் ஒரு புதிய படத்திற்கான செட் இந்த ஸ்டுடியோவில் போடப்பட்டு வருகிறது.
இந்த செட்டில், சாமி கிராமத்தைச் சேர்ந்த லைமேட் குமார்(47) பணியாற்றி வந்தார்.
இன்று காலையில், மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாரா விதமாக 40 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க பொன்னேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.