1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified செவ்வாய், 17 ஜனவரி 2023 (17:40 IST)

தென்னிந்திய நடிகர்களில் முதலிடம் பிடித்த சூர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  சூர்யா தென்னிந்தியாவில் பிரபல நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா.  இவர், தற்போது, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா42 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில்,  தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களாக தெலுங்கில்  பிரபாஸ், ராம்சரண், அல்லு அர்ஜூன், ஆகிய நடிகர்களும், தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகிய நடிகர்களும், கன்னட சினிமாவில் யாஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோர்  உள்ளனர்.

இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிரமான நடிகர் பட்டியலில், நடிகர் சூர்யா  முதலிடம் பிடித்துள்ளர். அடுத்தடுத்த இடங்களில் அல்லு அர்ஜூன், விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் மரியாதைக்குரிய நட்சத்திரமாக  நடிகர் சூர்யா முதலிடத்தில் உள்ளார். விஜய்தேவரகொண்டாவும்  ஜூனியர் என்.டி.ஆருடன் அடுத்த  இடத்திலுள்ளனர்.

தமிழில் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னணியில் உள்ளனர். அதேபோல் இந்திய அளவில் பாலிவுட்  நடிகர் அமிதாப் பச்சன்  நம்பகமான நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.