வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (16:22 IST)

இந்த தீபாவளி தல தீபாவளி... "வலிமை " படத்தின் அப்டேட் கொடுத்த போனி கபூர்!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். 
 
அஜித் போலீஸ் அதிகாரியாக  நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியும் போலீஸ் அதிகாரியாகவே நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே ரஜினியின் காலா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித் பைக் ரேஸராக மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் நிறைந்துள்ள இப்படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டதையடுத்து சற்றுமுன் இது குறித்து அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் விருது விழா ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, வருகிற 2020ம் ஆண்டின் தீபாவளி தினத்தன்று இப்படம் வெளியாகவிருப்பதாக கூறி தல ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளார்.