திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha
Last Updated : வியாழன், 27 பிப்ரவரி 2020 (12:50 IST)

வலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்...!

தல அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'வலிமை'படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 
இருந்தாலும் முதலுதவி மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து அஜித் அந்த போஷனை முடித்து கொடுத்ததாக தகவல்கள் கூறப்பட்டது. வருகிற தீபாவளிக்கு தினத்தில் ரிலீஸ் ஆகவிருப்பதால் படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். இவர் ஏற்கனவே ரஜினியின் காலா படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இப்படத்தில் விஜய் டிவி சீரியல் நடிகையான ஸ்டேபி வலிமை படத்தில் நடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜாக்குலின் கதாநாயகியாக நடிக்கும் தேன்மொழி BA என்ற சீரியலில் முக்கிய ரோலில் ஸ்டேபி நடித்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், நான் தல அஜித்தின் தீவிர ரசிகை. அவரோடு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்ற எனது கனவு வலிமை படத்தில் நிறைவேறியுள்ளது. இப்படத்தின் மூன்றாம் கட்ட  படப்பிடிப்பில் நான் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளேன் எனக்கூறினார்.