திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2017 (10:44 IST)

இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்த நடிகர் கமல்

நடிகர் கமல் இன்று தனது 63 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் மக்கள் நற்பணி மன்ற பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அவர் புதிய மொபைல் ஆப் ஒன்றை இன்று அறிமுக செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

 
இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இலவச மருத்துவ  முகாமை கமல் துவக்கி வைத்தார். மருத்துவ முகாம் துவக்க விழாவில் பேசிய கமல், மழை நீரை வெளியேற்றும் பணியில்  அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் மழை காலம் என்பதால் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக மருத்துவ உதவி அவசியம் என்பதால் மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். 
 
மக்கள் நற்பணி மன்றத்தினருக்கு மருத்துவ முகாம் நடத்துவதில் முன் அனுபவம் உள்ளதால் தமிழகம் முழுவதும் சுமார் 550  இடங்களில் மருத்துவ முகாம் இன்று நடக்கிறது. மருத்துவ முகாம் நடத்துவதற்கும் அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு நடிகர் கமல் பேசியுள்ளார்.