புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 நவம்பர் 2018 (12:07 IST)

விளம்பரங்களில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்ளோவ் சம்பளமா....!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விளம்பரங்களில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளிவந்துள்ளது . 
 
டஜன் கணக்கில் படங்கள் வைத்திருக்கும் நயன்தாரா குறிப்பிட்ட விளம்பர படங்களில் மட்டுமே நடிக்கிறார். அப்படி ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 3 கோடி சம்பளம் கேட்கிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் ரூ. 5 கோடி வாங்குகிறார். நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்கும் தொகையை தயாரிப்பாளர்கள் மறுக்காமல்  ஒப்புக்கொள்கின்றனர்.
 
தற்போது நயன்தாரா தனது நடிப்பில் வெளியாகி ஹிட்டான அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கோபி நயினார் இயக்கும் அறம் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது. இரண்டாம் பாகத்தில் நயன்தாரா அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்கிறார் இயக்குனர் கோபி நயினார்.