1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (11:08 IST)

நயன்தாரா எப்படிப்பட்டவங்க தெரியுமா? உருகும் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். இருவரும் அண்மையில் அமிர்தசரஸில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வந்த புகைப்படங்கள் வைரலாகின.

 
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இணைதளம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார் .

அப்போது அவர் தனது திரைப்பட அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். நயன்தாரா குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய விக்னேஷ் சிவன், 'நயன்தாரா ஒரு இன்ஸ்பெயரான கேரக்டர், அவங்க கடந்து வந்த பாதையில, நிறைய கவலைகள், சவால்கள பார்த்திருக்காங்க, எதை எப்படி பேலன்ஸ் பண்ணணும் தெரிஞ்சவங்க. அவங்களோட தன்னம்பிக்கை வேற லெவல். ரெம்ப ஸ்ட்ராங்கான மனுஷி. அவங்களுக்கு ரெம்ப மரியாதை கொடுப்பேன்' என்றார்.