திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (14:20 IST)

அரசியல் தலையீட்டால் டிலே ஆகிறதா பிகில் சென்சார்??

அரசியல் தலையீட்டால் பிகில் படத்திகு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என பதில் அளித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
 
இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
பலரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்ற பிகில் திரைப்பாடத்தின் டிரெய்லர் 26 மில்லியன் வீயூ-க்களை கடந்து பல சாதனைகளை படைத்து வருகிரது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியானும் சரியான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. படமும் இன்னும் சென்சார் ஆகவில்லை என தெரிகிறது. 
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், பிகில் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவதில் எந்த அரசியல் கட்சியும் நெருக்கடி கொடுக்கவில்லை. நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
 
அதோடு விஜய்யின் கடந்து இரு படங்களை போன்று பிகில் படத்திற்கும் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. படம் சென்சார் ஆனதும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என தெரிகிறது.