புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (14:10 IST)

“பிகில் என்னுடைய கதை”: வழக்கம் போல் ஒரு வழக்கு..

பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அட்லி, தற்போது மீண்டும் நடிகர் விஜய்யுடன் கைகோர்த்து இயக்கிய திரைப்படம் தான் பிகில். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளீயானதிலிருந்து விஜய் ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு “வெறித்தனமாக” காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருகிற தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வா என்பவர், பிகில் கதை தன்னுடைய கதை என வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு குறித்தான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பிக்குமாறு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படமும், இது போல் கதை திருட்டு வழக்கை சந்தித்தது. வழக்கு தொடுத்த வருண் ராஜேந்திரன் என்பவரின் பெயர் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் சேர்க்கப்பட்டது. கத்தி திரைபடத்தை தொடர்ந்து இது போன்ற கதை திருட்டு வழக்குகள் விஜய் திரைப்படங்களுக்கு வழக்கமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.